Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்- காங்., கவுன்சிலர் கோரிக்கை

காங்கிரஸ் கவுன்சிலரும் , வக்கீலுமான சிவ ராஜசேகரன் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது..

சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் மண்டலம்-5, 63வது வார்டுக்குட்பட்ட பார்டர் தோட்டம் பகுதியில் பழைய கனரகவாகன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான சிறு கடைகள் உள்ளன. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொழிலை நேரிடையாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் திடிரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கப்போராடினர். ஆனாலும் பெரும் சுவாளையாய் காட்டுத்தீ போன்று எரிவதால் சுமார் 8 மணி நேரமாகப் போராடி தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். கட்டிடங்கள், வியாபார சாதனங்கள். டயர்கள்,பொருட்கள், என அனைத்தும் எரிந்து சம்பலாகிப்போனது. இதன் பொருட்டு நல் வாய்ப்பாக உயிர் சேதம் தடுக்கப்பட்டாலும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கட்டிடம் பொருட்கள் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் முதல் தினக் கூலித் தொழிலாளர்கள் வரை அன்றாட வாழ்க்கைத் தொழில் முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது. மாமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற நாள் முதல் வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கையான புறநகர் சென்னைக்கு வெளியில் ஆட்டோநகரம் அமைக்க வேண்டுமென மாமன்றத்திலும், தமிழ்நாடு அரசின் கவனத்துக்கும் பேசியும்,எழுத்துப்பூர்வமாக தொடர்ந்து கோரிக்கையும் எழுப்பி உள்ளேன்.

சிஎம்டிஏ விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டங்களிலும் வலியுறுத்தினேன்.
தமிழக முதல்வராகப்பொறுப்பேற்று சிறப்பானத் திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் கொண்டுள்ள தாங்கள் பெருநகர சென்னை மாநகரின் மையப்பகுதியான சேப்பாகம் திருவல்லிக்கேணிப் பகுதியின் வாழ்வாதாரத் தொழிலைப்பாதுகாத்திடும் வகையில் தீக்கிரையான கடைகளுக்குரிய
இழப்பீடையும், வியாபாரிகள் ஆறு மற்றும் மாதத்திற்குரிய தினக்கூலித்தொழிலாளர்களுக்கு
வருவாய் இழப்பை கணக்கில் கொண்டு உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பரிவுடன் வேண்டுகிறேன். புதுப்பேட்டை, ஜி.பி.ரோடு பகுதிகளில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க புதிய ஆட்டோ நகரம் தங்கள் புதிய நல்லாட்சியில் அமைய ஆவண செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!