Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 திருடர்கள் கைது

திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடியில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து குழந்தையின் வெள்ளி கொலுசை திருடிய ஆந்திரா மற்றும் சென்னையைச் சேர்ந்த 3 திருடர்கள் கைது .

திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் தனது சகோதரர் வெளிநாட்டிலிருந்து வருவதால் தனது வீட்டை பூட்டிவிட்டு ஆடுதுறை அருகே ஆவணியாபுரத்தில் உள்ள தாய்வீட்டிற்கு 2 நாட்களுக்கு முன் சென்றிருந்தார் . இந்த நிலையில் திருமங்கலக்குடியில் உள்ள பாத்திமாவின் வீடு திறந்து இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து, பாத்திமா தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததும், பீரோவில் இருந்த குழந்தையின் வெள்ளி கொலுசு திருடப்பட்டிருப்பது தெரியவந்தது .

இதனை தொடர்ந்து பாத்திமா, திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் போலீசார் அந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதில் 3 பேர் இருப்பதும் , அவர்கள் வந்த வாகனத்தின் எண்ணை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து சென்னையில் பதுங்கி இருந்த எண்ணூரைச் சேர்ந்த முகமது கனி, மாதவரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், ஆந்திர மாநிலம் தடா பகுதியைச் சேர்ந்த கண்ணப்ப குண்ட கார்த்தி ஆகிய 3 நபர்களை திருவிடைமருதூர் காவல் நிலையத்தார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இவர்களிடமிருந்து கடப்பாரைகள், கையுறைகள், ஹெல்மெட்டுகள், ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!