Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறித்த இந்திய வம்சாவளி நபர்கள் 17 பேர் கைது

கனடாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து சென்று குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். இந்த நிலையில், அந்நாட்டில் தெற்காசிய வர்த்தக உரிமையாளர்கள் பலரை, சிலர் கும்பலாக செயல்பட்டு பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.
கனடா, அமெரிக்காவை சேர்ந்த சமூக உறுப்பினர்களும் மிரட்டப்பட்டு உள்ளனர். இதுபற்றி பீல் மண்டல போலீசார் விசாரணை செய்தனர். இதில், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பரில் கனடா போலீசார், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அமெரிக்க எப்.பி.ஐ. அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டு விசாரணையில், கடந்த ஏப்ரலில் 17 பேர் வரை அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் அனைவரும், பார் பிரதர்ஸ் என்ற பெயரிலான சர்வதேச குற்ற பின்னணி கொண்ட நெட்வொர்க் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளனர். தொழிலதிபர்களை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர்கள் என்பதும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்களிடம் இருந்து 6 துப்பாக்கிகள், சட்டவிரோத போதை பொருட்கள், மொபைல் போன்கள், சிம் கார்டுகள் மற்றும் மோசடியான அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இன்னும் பலர் கைது செய்யப்பட கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!