சென்னை: அரசியல் கட்சிப் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் சட்டவிரோதமாகக் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக தவெக கட்சிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 1-ஆம் தேதிக்குள் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
விசாரணை தள்ளிவைப்பு: தவெக தரப்பு விளக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் ஜூலை 1-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளது.
