Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

25 வருட கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா

சிவகாசி-கோணம்பட்டி கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த சிவகாசி – கோணம்பட்டி பேருந்து சேவையை அமைச்சர்  கீர்த்தனா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து பொதுமக்களோடு அரசுப் பேருந்தில் பயணித்தார்.


சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையிலுள்ள  கோணம்பட்டியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது குழந்தைகளுடன் வெளியூர் செல்வதற்காக கோணம்பட்டி விலக்குப் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது நீண்ட நேரமாகியும் பேருந்து வராததாலும், கோணம்பட்டி விலக்கில் நிற்காமல் சென்றதாலும் ஆத்திரமடைந்து எங்களுக்கு இலவச பேருந்து சேவை கூடத் தேவையில்லை. ஆனால் முறையாக பேருந்து வசதியை செய்து தர வேண்டுமென  முதல்வர் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது. மற்றும் தங்கள் கிராமமான கோணம்பட்டி ஊருக்குள் பேருந்து வராததால் சுமார் 2- கிலோமீட்டர் தூரம் அனைத்து தரப்பினர்களும் நடந்து சென்று பேருந்து ஏறி பயணம் செய்ய வேண்டிய நிலை தொடர்வதாகவும் அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார். 

error: Content is protected !!