டில்லி மற்றும் மும்பையில் பதுங்கியிருந்த பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பு மற்றும் தீவிரவாதி தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய 9 பேரை டெல்லி போலீஸ் கைது செய்தது. நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு தளங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களை குறிவைத்து இவர்கள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக பரபரப்புத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
