Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருத்தணியில் இலவச மொட்டைக்கு பணம் வசூல் – 4 பேர் சஸ்பெண்ட்

திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற தலைமுடி காணிக்கை வழங்கி முருகப்பெருமானை வழிபடுவர். பக்தர் கள் வசதிக்காக மலைக்கோவிலில் தலைமுடி காணிக்கை அளிக்க படாசெட்டிகுளம் அருகே ரூ.1 கோடி செலவில் குளியல் அறை, நவீன வசதிகளுடன் 2 அடுக்கு கட்டிடத்துடன் கழிவறை பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. இங்கு பக்தர்களுக்கு இலவசமாக மொட்டை அடிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக முடி காணிக்கை செலுத்தும் மையங்களில் நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்களிடம் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், ஒரு மொட்டைக்கு குறைந்தபட்சம் ரூ.50 முதல், ரூ.100 வரை வசூலிப்பதாக முருகன் கோவில் நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பக்தர்களிடம் பணம் வாங்கிய தினேஷ், வெங்கடேசன், சந்தோஷ் மற்றும் கார்த்திக் என 4 தற்காலிக ஊழியர்களை கோவில் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்தனர்.

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் கடைகள் கட்டி கோவில் நிர்வாகம் ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடுகிறது. இந்த கடைகளை ஏலம் எடுத்தவர்கள் பூஜை பொருட்கள், பஞ்சாமிர்தம் மற்றும் முருகன் படங்கள், கயிறுகள் விற்பனை செய்கின்றனர். குறிப்பாக பஞ்சாமிர்தம், கால் கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை பிளாஸ்டிக்டப்பாவில் அடைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.கடந்த சில நாட்களாக பஞ்சாமிர்தம் கெட்டுபோயும், காலாவதியான பஞ்சாமிர்தம் விற்பனை செய்வதாக கோவில் நிர்வா கத்துக்கு புகார்கள் வந்தது.

இந்த நிலையில் நேற்று திருத்தணி மலைக்கோவிலில் பஞ்சாமிர்தம் விற்கப்படும் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பஞ்சாமிர்தம் டப்பாவில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி போன்றவை குறிப்பிடவில்லை. மேலும் பஞ்சாமிர்தம் கெட்டுபோய் இருந்தது. இதையடுத்து மொத்தம் 100 கிலோ பஞ்சாமிர்தம், சிப்ஸ், கற்கண்டு போன் றவற்றை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!