Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மெட்ரோ தொழிலாளர்கள் ஷெட் இடிந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்

சென்னை ராமாபுரத்தில், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தற்காலிக குடியிருப்பு அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியை தொலைக்காட்சியில், மெட்ரோ தொழிலாளர்கள் சிலர் பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது, இரும்பு ஷெட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட மெட்ரோ தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி வடமாநில தொழிலாளி ஒருவர் பலியாகி உள்ளார்.
அவர் ஜார்கண்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து நந்தம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!