Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அவசர ஆலோசனை


தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யா கண்ணு, காவிரி தனபாலன் ஆகியோர் தலைமை தாங்கினார் மகாதானபுரம் ராஜாராம், காளிமுத்து, சிவகுமார், பிரகாசு, தனபதி, பக்கிரிசாமி இளங்கோவன், முகமது ரபிக் , தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில்
விவசாயிகளுக்கு தமிழக அரசு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ஏமாற்று வேலை.
தேர்தல் வாக்குறுதி படி
சிறு விவசாயிகளின் கடன்களை முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் பெரிய விவசாயிகளுக்கு பாதி சதவீதம் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் டெல்டா பாலைவனமாகும் அபாயம் உள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடக மாநில முதன் மந்திரி சிவக்குமார் அணையை கட்டியே தீருவேன் என கூறுகிறார் அவ்வாறு அவர் முயற்சி மேற்கொண்டால் அதை தடுத்து நிறுத்த தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்படும். மேலும் இந்த அணை விவகாரத்தில் தமிழக முதலமைச்சரை விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

error: Content is protected !!