புதிய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அந்த கூட்டணியில் இல்லை.
பா.ஜ.க ஆட்சி வந்து விட கூடாது என்பதற்காக த.வெ.கவிற்கு வெளியிலிருந்து தான் ஆதரவு தெரிவித்துள்ளோம்.
திமுக தலைமையிலான கூட்டணியில் தான் தொடர்கிறோம் என எங்கள் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஏற்கனவே தெரிவித்துள்ளார் அதே நிலை தான் இன்றும் தொடர்கிறது.
ஒன்றிய அரசு வி.பி.ஜி.ராம்.ஜி திட்டத்தை வரும் ஜீலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை எதிர்த்து ஏற்கனவே
திமுக ஆட்சியில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போதைய முதலமைச்சர் விஜய் இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதையும் எதிர்த்து நாங்கள் போராடுவோம்.
தாவேக்கா தரப்பிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரசிற்கு கொடுக்கப்பட்டுள்ளது நாங்கள் த.வெ.கவிற்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்துள்ளோம்.
ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் தொடர்பாக த.வெ.க தரப்பிலிருந்து எந்த கருத்தையும் எங்களை அழைத்து கேட்கவில்லை.
ஒரு மாநிலம் கடன் வாங்கி தான் ஆட்சி செய்ய முடியும் எதற்காக கடன் வாங்குகிறார்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை தான் பார்க்க வேண்டும்.
ஒன்றிய அரசு தொடர்ச்சியாக பாஜக ஆளாத மாநிலங்களை புறக்கணித்து வருகிறது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கடன் வாங்கி தான் ஆட்சி செய்ய முடியும்.
ஒரு கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் ராஜினாமா கடிதம் எழுதிவிட்டு விட்டுவிடுவார்கள் ஆனால் அண்ணாமலை அவர்கள் கட்சித் தலைவர்கள் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து விட்டு அவர்களின் ஆலோசனைப்படி கட்சி தொடங்குகிறார் அவர் யாரின் வினாமியாக கட்சி தொடங்குகிறார் என்பது இனிமேல் தான் தெரியும்.
தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என திரும்பத் திரும்பத் தெரிந்து விட்டது அதன் காரணமாக இது போல் மற்றவர்களை வைத்து பாஜக கட்சி தொடங்க வைக்கிறார்கள் அண்ணாமலை யாருக்காக கட்சி தொடங்குகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
