தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை, விருதுநகரில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
