Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்ணாமலையை தொடர்ந்து புதிய இயக்கம் துவங்கிய லதா ரஜினி

சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்தின் மனைவி ‘மக்கள் மேடை’ எனும் புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார். மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
‎அதில், “‎‎அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களை செய்வோம். ‘சிட்டிசன் பிளாட்பார்ம்’ என்ற எங்கள் இயக்கத்தில் ஆர்வம் இருக்கக்கூடிய யார் வேண்டுமானாலும் சேரலாம். பெரும் மக்கள் சேவையாக, மக்கள் சக்தியாக உருவாகி இந்த சமூகத்திற்கு பல நன்மைகளை செய்ய அனைவரும் முன் வாருங்கள். ஒன்று சேருவோம்.

ஆக்கப்பூர்வமான மக்களுக்கான காரியங்களை செய்வோம். மூத்த குடிமக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் உங்களின் அனுபவத்தை எங்களுக்கு கொடுக்கலாம். எங்களுடன் இணைந்து தமிழ்நாட்டுக்காகவும், தொகுதிக்காகவும் நீங்கள் வேலை செய்யலாம். உள்ளூர் தலைவர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்” என கூறியுள்ளார்.‎‎

அத்துடன், இந்த இயக்கத்தில் இணைவதற்கான விபரங்களையும் தமது வீடியோவில் லதா ரஜினிகாந்த் அளித்துள்ளார். முக்கியமாக இயக்கத்தில் சேருவதற்காக தனி செல்ஃபோன் எண்ணையும் (7550080515). makkalmedaitn12@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியையும் அவர் கொடுத்துள்ளார்.

பாஜக-வில் இருந்து விலகி அண்ணாமலை ‘வி த லீடர்’ (We The Leader) எனும் இயக்கத்தையும் அவர் தொடங்கி உள்ளார். விரைவில் இதை அரசியல் கட்சியாக மாற்றி 2031 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த அறிவிப்பு ஏற்கனவே தமிழகத்தை பரபரப்பாக்கியுள்ள இந்த சூழலில் கூடுதல் விறுவிறுப்பாக நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த், புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!