இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் சமீபத்திய ஃபார்ம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுவது அசல் முட்டாள்தனம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் முதன்மைத் தேர்வாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிகக் காரசாரமாக விமரிசித்துள்ளார்.
ODI-ல் ஜடேஜாவை ஓரங்கட்டுவது முட்டாள்தனமானது என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். AFG ODI தொடரில் ஜடேஜா இடம் பெறாதது குறித்து பேசிய அவர், சமீபத்தில் ஜடேஜா தடுமாறினாலும், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வெற்றிக்கு ஜடேஜா முக்கிய பங்காற்றினார் என கூறினார். மேலும், சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜாவை இப்போதே நிராகரிக்க கூடாது எனவும் குறிப்பிட்டார்.
