Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் எம்பி துரை வைகோநேரில் மனு!

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் எம்பி துரை வைகோநேரில் மனு!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் (MP) துரை வைகோ அவர்கள், திருச்சியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை நேரில் அழைத்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். பல்வேறு முக்கியப் பகுதிகளை இணைக்கும் மேம்பாலப் பணிகள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைப்பது தொடர்பான கோரிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

திருச்சி மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சந்திப்புகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் திட்டமிடப்பட்ட உயர்மட்ட மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த நிலையில், இப்பணிகளுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI) மண்டல அதிகாரி கோவிந்தசாமியை இன்று திருச்சியில் உள்ள தனது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது, திருச்சி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நிலுவையில் உள்ள மற்றும் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டிய நெடுஞ்சாலைத் துறை உள்கட்டமைப்புப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆலோசனையின் முடிவில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனு ஒன்றை மண்டல அதிகாரி கோவிந்தசாமியிடம் துரை வைகோ எம்பி வழங்கினார். அந்த மனுவில், திருச்சியின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டமான ஜிகார்னர் உயர்மட்ட சுழற் பாலம் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி விரைவாக நிறைவற்றிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், சஞ்சீவி நகர், ஸ்ரீரங்கம் ஒய்ரோடு ,மற்றும் மாருதி நகர் ஆகிய முக்கியப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வாகனப் போக்குவரத்திற்கு ஏதுவாகப் புதிய சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் முக்கியக் கோரிக்கையாக விடுத்துள்ளார்.

error: Content is protected !!