தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சவரனுக்கு 880 குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 110 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.13,950க்கு விற்பனையாகிறது.
