Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவில் விழாவில் போதை ரகளை: பொதுமக்களிடம் மோதிய 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோவில் திருவிழாவில் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 2 போலீசாரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பழனி அருகே அமைந்துள்ள கோரிக்கடவு கருப்பணசாமி கோவில் திருவிழாவில், பாதுகாப்பு பணிக்கு சென்ற கீரனூர் போலீசார் இருவர், மதுபோதையில் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

இந்த விவகாரம் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர் பார்த்திபன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திண்டுக்கல் எஸ்.பி. அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!