ராமேஸ்வரம் கோயிலில் இரு குடும்பத்தைச் சேர்ந்த பக்தர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் கோயிலில் ஒருபுறம் அமைச்சர் மதன்ராஜா ஆய்வு செய்தபோது மறுபுறம் பக்தர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். போதிய பாதுகாப்பு இல்லாததால் கோயிலில் வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமம் என புகார் அளித்துள்ளனர். பக்தர்கள் கடுமையாக தாக்கிக் கொண்ட நிலையில் கோயில் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
