Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இப்பதான் பாராட்டு கிடைச்சிருக்கு! – “நூறு சாமி” படம் வெற்றி”- விஜய் ஆண்டனி

இப்பதான் பாராட்டு கிடைச்சிருக்கு! - "நூறு சாமி" படம் வெற்றி"

சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசி கூட்டணியில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி,

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தாய் – மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த குடும்பத் திரைப்படம், உணர்வுபூர்வமான கதைக்களத்தால் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, நடிகை சுவாசிகாவின் நடிப்பை வெகுவாக பாராட்டினார். “இந்தியாவில் ஆஸ்கர் விருது வழங்கும் முறை இருந்தால், அது சுவாசிகாவுக்குத்தான் கிடைக்க வேண்டும்” என்று கூறிய அவர், மேடையிலேயே நகைச்சுவையாக ஒரு தண்ணீர் பாட்டிலை விருதாக வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும், தனது நடிப்பு பயணம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிய விஜய் ஆண்டனி, “நான் சுமார் 20 படங்கள் வரை நடித்திருக்கிறேன். ஆனால், என் நடிப்பை பாராட்டி மக்கள் நேரடியாக

பேசுவது இந்த படத்திற்குப் பிறகுதான். அதுதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அதோடு சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். “நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், பெண்கள் மீதான பாகுபாடு இன்னும் முழுமையாக நீங்கவில்லை. பெண்களை சமமாக மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் மேலும் வலுப்பெற வேண்டும்” என்று அவர் கூறினார்.

‘நூறு சாமி’ திரைப்படம் தாயின் தியாகம், மகனின் பாசம் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழத்தை உணர்வுபூர்வமாக சொல்லும் படைப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.

error: Content is protected !!