வெனிசுலா நிலநடுக்கத்தில் புதைந்த 18 நாள் பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் சரிந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு மீட்ட மீட்புப் படையினர், குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தனர். அதன்பின் சிறிது நேரத்தில் தாயும் உயிருடன் மீட்கப்பட்டார்.
