திருப்பூர் அருகே யூ டியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் அவரது கணவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தளவாய்பாளையத்தில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த இளம்பெண் சசிகலா நேற்று உயிரிழந்தார். வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் நஞ்சுக்கொடி வெளியேறாமல் ரத்தப்போக்கு ஏற்பட்டு இளம்பெண் உயிரிழந்தார்.
யூடியூப் பார்த்து பிரசவம்.. கர்ப்பிணி பலி.. கணவர் மீது வழக்கு
