லாபத்தில் இயங்கும் NLC நிறுவனத்தின் 3% பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், மத்திய அரசை எதிர்க்கும் NLC ஊழியர் சங்கம் உள்பட அனைவருக்கும் அதிமுக ஆதரவளிக்கும் என்றார். மேலும், மத்திய அரசின் முடிவுகளை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். NLC பங்குகளை TN அரசே வாங்க வேண்டும் எனவும் EPS குறிப்பிட்டுள்ளார்.
