Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“மகளின் காலில் விழுந்து கதறிய பெற்றோர்!” – ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நெஞ்சை உருக்கும் காட்சி

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி லாரிசெட் பகுதியை சேர்ந்தவர் காளி. இவரது மனைவி பிரவீனா. இந்த தம்பதியின் மகள் திவ்யதர்ஷினி ( 19). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவரின் மகன் பெருமாள் (23). இவர் அந்த பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், திவ்யதர்ஷினிக்கும் வாலிபர் பெருமாளுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் தீராத காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. வாலிபர் பெருமாளின் காதலை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர், இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மகளை கண்டித்து வீட்டு காவலில் வைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி, தங்களை பிரித்துவிடுவார்களோ என்ற பயத்தில் வீட்டை விட்டு வெளியேறிவர்கர்கள் ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்று காலை தஞ்சம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மாணவியின் பெற்றோர் பதறியடித்தபடி காவல் நிலையத்திற்கு ஓடி வந்தனர். அங்கு தன் மகள் திவ்யதர்ஷினி காதலனுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்த பெற்றோர், அதிர்ச்சியில் உறைந்தனர். அதனை தொடர்ந்து, திவ்யதர்சினியின் காலில் விழுந்து அவரது பெற்றோர் இருவரும், எங்களோடு வீட்டிற்கு வா, எங்களை அநாதையாக விட்டுவிட்டு போகாதே என்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும், மகளின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டு தங்களுடன் வருமாறு கெஞ்சினர். இதனால் காவல் நிலைய வளாகத்திற்குள் பெரும் சலசலப்பும், காரசாரமான வாக்குவாதமும் ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட போலீசார், பெற்றோரை கட்டாயப்படுத்திச் சமாதானம் செய்து, காவல் நிலையத்தை விட்டு பலவந்தமாக வெளியே அனுப்பினர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதில், ஆத்திரமடைந்த திவ்யதர்ஷினியின் பெற்றோர் போலீஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் திடீரென உருண்டு அழுதனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. அப்போது திவ்யதர்சனின் தந்தை காளி கூறுகையில்:- பெருமாளின் நடத்தை சரியில்லை. அதுமட்டுமின்றி ஊரில் கேட்கும் போது ஒருவர் கூட பெருமாளை பற்றி நல்ல விதமாக சொல்லவில்லை.எனது மகளை தயவுசெய்து மீட்டு என்னுடன் அனுப்புங்கள் என கெஞ்சியபடி கதறி அழுதார். இந்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது. இதைத்தொடர்ந்து, காதல் திருமணம் செய்து கொண்ட மாணவி கதலனுடன் செல்வதாக கூறியதால் அவருடன் அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!