ஜம்மு-காஷ்மீரின் ரஸ்தான் கணவாய் பகுதியில் செங்குத்தான மலைச்சரிவில் சுற்றுலா சென்ற கார் ஒன்று உருண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, வாகனம் பள்ளத்தாக்கில் பாயும் முன்பே அதில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காரின் ஹேண்ட் பிரேக் செயலிழந்து எதிர்பாராதவிதமாக ஆழமான பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து காரை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
