சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமா. இவரின் கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களின் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் நேற்று (ஜூலை.10) ஒரே காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது, டேங்கர் லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக இவர்களது கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
