Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏரியில் பெண் கொடூர கொலை… திருச்சியில் உறவினர்கள் மறியல்..பரபரப்பு

ஏரியில் பெண் கொடூர கொலை... திருச்சியில் உறவினர்கள் மறியல்..பரபரப்பு

திருச்சி லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த செந்தமிழ் செல்வி என்ற இளம் பெண் ஒருவர், ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமான முறையில கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார்.
கொலை நடந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு முன்னிலை வகித்தார்.
இந்தப் போராட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் திரண்டு திடீர் சாலை

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சாலை மறியலால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.


போராட்டக்காரர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர. அப்போது விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர் அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.

error: Content is protected !!