குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி மணப்பாறை கூடாதிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ராஜ்குமார் (வயது 25) இவருக்கும் பாண்டி தர்ஷினி( 23 )என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி சின்ன சின்ன தகராறுகள் ஏற்பட்டு வந்தன.
இதனால் மனம் உடைந்த ஜான் ராஜ்குமார் யாரும் எதிர்பாராத வகையில் தனது வீட்டில் ஃபேன் கொக்கியில் தூக்கு போட்டு தொங்கினார்.
பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை உறவினர்கள் மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இவ்வாறு கடந்த 20 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் ஜான் ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி பாண்டி தர்ஷினி வையம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மா உணவகம் அருகே முதியவர் மயங்கி விழுந்து சாவு
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 68) இவர் ஒரு வேலை விஷயமாக துறையூர் வந்தார்.பின்னர் துறையூர் அம்மா உணவகம் அருகே நடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருந்தபோதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூவீலரில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி– மகன் கண் முன்பு பரிதாபம்
திருச்சி மணச்சநல்லூர் சின்ன காட்டு குளம் ஹரிஜின தெரு பகுதியை சேர்ந்தவர் ஹரிவேந்தன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 79).
இவர் தனது மகன் சந்திரசேகரனின் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து கொண்டு ராசாம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். பின்னர் அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .பின்னர் மகன் அவரை மீட்டு மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
அங்கே டாக்டர்கள் கடந்த ஐந்து நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பல்கலைக்காமல் தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மூதாட்டியின் இளைய மகன் இளங்கோவன் கொடுத்த புகாரின் அடிப்படையில்
போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.
