Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வரும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் நாட்டுத் தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைக் கொல்ல வேண்டும் என ஈரானிய மக்கள் முழக்கமிட்டது, அமெரிக்காவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள மிரட்டல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் பேசுகையில், என்னைத் தாக்குவதற்கு ஈரான் துணிந்தால், அந்நாட்டை முற்றிலுமாகத் தரைமட்டமாக்க 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன” என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.இந்த ஏவுகணைகளை ஏவுவதற்கான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுவிட்டதாகவும், அமெரிக்க ராணுவம் ஈரானைத் தாக்க எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கோரிக்கையை ஏற்று அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், ஏற்கனவே அறிவித்தபடி போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது” என்று ட்ரம்ப் தனது முரண்பாடான ஆனால் கடுமையான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரான் நாட்டைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவரின் மறைவுக்குப் பிறகு, அந்நாட்டில் அமெரிக்காவிற்கு எதிரான உணர்வுகள் மிகவும் வலுவாக உள்ளன. இதற்கு எதிர்வினையாக அமெரிக்கா தனது ராணுவ வலிமையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் வர்த்தகப் போக்குவரத்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா பெரும் எண்ணிக்கையிலான படைகளைக் குவித்துள்ளது.

இந்த மிரட்டல்கள் மற்றும் எதிர் முழக்கங்கள், ஏற்கனவே போர் அச்சத்தில் இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளின் நிலைத்தன்மையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளன. உலக நாடுகளின் தலைவர்கள் இந்த விவகாரத்தில் அமைதி காக்க வலியுறுத்தி வரும் சூழலில், ட்ரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பு போர் மேகங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!