Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய அரசை கண்டித்து..200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து..200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தில் அறநிலைத்துறையால் கோவில் நிலங்கள் என வகைப்படுத்தப்பட்ட நிலங்களில் 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கு பத்திரப்பதிவு தடை நீக்கப்பட்டது: எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக மாநில தலைவர் மற்றும் மத்திய அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

கரூர் மாவட்டத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், குப்பச்சிபாளையம் ரவீஸ்வரர் கோவில் மற்றும் வெஞ்சமாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோவில் ஆகிய நான்கு கோவில்களுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மொத்தம் 15 கிராமங்களில் 3,084.95 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களின் பத்திரப்பதிவு தடையை நீக்கும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை ஆணையர், சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை பிறப்பித்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,
பத்திரப்பதிவு தடை நீக்கப்பட்டுள்ள நிலங்கள் கோவில் நிலங்களே என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்தை கண்டித்ததுடன், பத்திரப்பதிவு தடையை ரத்து செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் இனம் நில உரிமை மீட்பு கூட்டமைப்பு, இனம் நில விவசாயிகள், குத்தகைதாரர்கள் மற்றும் வீட்டு மனை உரிமையாளர்கள் இயக்கம், பல்வேறு விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, பாஜக மாநில தலைவர் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

error: Content is protected !!