சொத்துக்குவிப்பு வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. 2011-ல் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்த வழக்கு இதுவாகும். தன்னை விடுவிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில், ஜூலை 30-க்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
