தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு நைனாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குப்பை கிடங்கில் ஒரு ஏக்கருக்கு உள்ளாக குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரித்து கழிவுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு திடீரென பெரும்

தீப்பிழம்புடன் குப்பைகள் தீப்பிடித்து எறிந்தன. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீ பரவி பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பேராவூரணி தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டது. இது பற்றி பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையரிடம் கேட்ட பொழுது, தீப்பிடிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. எப்படி தீ பிடித்தது என்பதை இனிமேல் தான் விசாரித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
