புதுச்சேரி: 20-க்கும் மேற்பட்ட மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 4 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரையில் பதுங்கியிருந்த குற்றவாளி காளிதாஸை ஆய்வாளர் பாபுஜி தலைமையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.33.75 லட்சம் மோசடி செய்ததாக காளிதாஸ் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
