Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

திருச்சி முக்கொம்பு காவிரிஆற்றில் இறங்கி விவசாயிகள்போராட்டம்

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்

உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் மாத மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் மத்திய அரசும், கர்நாடகா அரசும் இன்று வரை காவிரியில் தண்ணீர் திறந்துவிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை தமிழகத்திற்கு தரவேண்டிய ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரை 53 டிஎம்சி தண்ணீரை இன்று வரை திறந்து விடவில்லை. இதனால் தமிழகத்தில் குடிநீர் உணவு பஞ்சமும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.
மத்திய அரசு தமிழ்நாடு பாலைவனமாக மாறினால், விவசாயம் செய்யாமல் போனால், பெட்ரோல் டீசல் மீத்தேன் போன்றவை எடுக்கலாம் என்று தமிழகத்தை கண்டு கொள்வது கிடையாது., தமிழக விவசாயிகளையும் கண்டு கொள்வது கிடையாது என்பதை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி முக்கொம்பு மேலணையில் ஆற்றில் இறங்கி மணலில் புதைந்து போராட்டம் நடத்தினர்..

error: Content is protected !!