Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தலைநகரில் காவல் துறையின் அத்துமீறலுக்கு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம்

தலைநகரில் காவல் துறையின் அத்துமீறலுக்கு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம்

டில்லி காவல் துறையினர் நடத்தியுள்ள தாக்குதல் மற்றும் வலுக்கட்டாயக் கைது நடவடிக்கைக்குத் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் தலைநகரிலேயே மக்களின் ஜனநாயக உரிமைகள் கொடூரமாக நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என அவர் தனது அறிக்கையில் ஆவேசமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தியும், நீட் முறைகேடுகளுக்கு நீதி கோரியும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனநாயக ரீதியில் குரல் கொடுத்தனர். ஆனால், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குப் செவிசாய்க்காமல், காவல் துறையை ஏவி தடியடி நடத்தியும் தலைவர்களைத் தூக்கிச் சென்று சிறைபிடித்தும் மத்திய அரசு தனது அதிகார பலத்தைக் காட்டியுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி குரல் கொடுப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்றும், அதை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிட முடியாது என்றும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைதியாகப் போராடியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறை தாக்குதல்கள், நாட்டின் மக்களாட்சித் தத்துவத்திற்கே விடப்பட்ட மிகப்பெரிய சவால் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான பொய் வழக்குகளைத் தில்லி காவல்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு மதிப்பளித்து நீட் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!