பயணிகளின் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து ஜூலை 30, ஆகஸ்ட் 1, 6, 8, 13, 15 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 3.30 மணிக்கு தென்காசி சென்றடையும். மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து ஜூலை 31, ஆகஸ்ட் 2, 7, 9, 14, 16 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். 23 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் பல முக்கிய நிலையங்களில் நின்று செல்கிறது.
