Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க- அனுமதிக்ககூடாது… கோரிக்கை

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க- அனுமதிக்ககூடாது

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது – கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு.

கரூர் தான்தோன்றி மலை ஜீவா நகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிக்கு நடுவே, தனியார் நிறுவனம் ஒன்று செல்போன் டவர் (Cell Tower) அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அப்பகுதியில் முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் வசித்து வரும் சூழலில், குடியிருப்புகளுக்கு மிக அருகில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் (Radiation) புற்றுநோய், கர்ப்பசிதைவு மற்றும் இதய நோய் போன்ற பல்வேறு தீவிர ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், இந்த செல்போன் டவர் அமைக்கும் பணிக்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்றும், தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.

error: Content is protected !!