Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில்வே பாலத்தில் அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள்-2 பேர் பலி

விழுப்புரம் அருகே ஐயூர் அகரம் ரயில்வே பாலத்தில் இருசக்கர வாகனம், வால்வோ பேருந்து, கார் மற்றும் டெம்போ டிராவலர் ஆகிய நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனம் மற்றும் காரில் பயணித்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மூன்று பேர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் ஐயூர் அகரம் ரயில்வே பாலத்தில் இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த வால்வோ பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதன் தொடர்ச்சியாக, பேருந்தின் பின்னால் வந்த கார் மற்றும் டெம்போ டிராவலர் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதிப் பெரும் விபத்து உருவானது. இந்த விபத்தின் கோரத் தாக்குதலில் பைக்கில் சென்ற நபர் மற்றும் காரில் பயணித்த நபர் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இதில் படுகாயமடைந்த 3 பேரை அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!