Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருச்சி கே கே நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கே.கே. நகர் போலீசார் தகவல் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் கே.கே. நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த நிக்கா வேலு (32) என்பவர் கே.கே. நகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளார். இவர், திருநெல்வேலி பாளையங்கோட்டை சேர்ந்த சிவமுருகன் (வயது26) என்பவருடன் சேர்ந்து மற்றும் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நிக்கா வேலு, சிவமுருகன் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த இரண்டு பெண்களையும் மீட்டு திருச்சி இ.பி. ரோடில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!