Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் காற்றுடன் கூடிய கனமழை… மக்கள் மகிழ்ச்சி…

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை – வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகள் மக்கள் மகிழ்ச்சி.

கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து கரூர் நகரின் ஜவகர் பஜார், வெங்கமேடு, பவித்திரம், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

குறிப்பாக பசுபதிபாளையம் பகுதியில் கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்யாததால் மழையின் காரணமாக மின்சார டிரான்ஸ்பார்மர் இருக்கும் இடத்தை சுற்றி அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால், பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள், அலுவலகப் பணிகளை முடித்து சென்ற ஊழியர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை நேரத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!