Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக அரசின் முதல் பட்ஜெட்.. ஏமாற்றமே மிச்சம்… இந்திய கம்யூனிஸ்ட்

தவெக அரசின் முதல் பட்ஜெட்-ஏமாற்றமே மிச்சம்-இந்திய கம்யூ.,

தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட்டில் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதை பற்றிய திட்டவட்டமான அறிவிப்புகள் இல்லை என அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் விமர்சித்து உள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் தொடர்பாக கருத்து கூறியிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட்டை சேர்ந்த மு.வீரபாண்டியன், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இது இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் சொல்லிய வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ரூ 4000 நிவாரண உதவி வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு இல்லாதது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தவிர அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் போன்ற தவெக-வின் பல முக்கிய மற்றும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுதோறும் வீடுகளுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது மக்கள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ஒப்பந்தப்பணியாளர்கள், தற்காலிக பணியாளர்களின் பணிநிரந்தரம் குறித்த அறிவிப்பு இல்லை என்பது பெரும்பகுதி தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது.

தவெக அரசின் நிதிநிலை அறிக்கையின் பெரும் பகுதி, மக்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொள்ளவில்லை. மொத்தத்தில் “தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை” என்று வீரபாண்டியன் விமர்சித்து உள்ளார்.

error: Content is protected !!