Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை பாராட்டி சாக்லேட் வழங்கிய நடிப்பு அரக்கன்”

திருவொற்றியூரில் போக்குவரத்து போலீசார் உடன் இணைந்து நடிப்பு அரக்கன் திவாகர் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

சென்னை திருவொற்றியூர் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எண்ணூர் விரைவு சாலையில் நடிப்பு அரக்கன் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் போக்குவரத்து போலீசார் உடன்

இணைந்து ஹெல்மெட் அணிவதன் நன்மைகள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் விபத்து

ஏற்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன போட்டிகளை பாராட்டி அவர்களுக்கு சாக்லேட் வழங்கி கௌரவித்தனர் இதில் போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிப்பு அரக்கன் திவாகர் ஹெல்மெட் அணியாமல் விபத்து ஏற்பட்டு தலையில் அடிபட்டால் பக்கவாதம் ஏற்பட பாதிப்பு உள்ளதாகவும் சிறிய எலும்புகள் உடைந்தால் கூட அறுவை சிகிச்சை வரை சென்றுவிடும் இதற்கு பல லட்சங்கள் பணம் செலவழிக்க நேரிடும் அதற்கு பதிலாக தமிழக அரசு பாதுகாப்புக் கருதி அறிவுறுத்தக்கூடிய ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டுங்கள் செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டாதீர்கள் அதிக வேகமாக வாகனங்களை செலுத்தி விபத்தில் சிக்காதீர்கள்.

வெயில் மழை பாராமல் நமக்காக போக்குவரத்து போலீசார் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களுக்கு நாமும் ஒத்துழைப்பு தர வேண்டும் அதற்கு போக்குவரத்து விதிகளை மீறாமல் வாகனங்களை ஓட்டுங்கள் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார் ஆகையால் நம்முடைய ஒத்துழைப்பை அவர்களுக்கு தர வேண்டும் என தெரிவித்தார்.

error: Content is protected !!