Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

MBBS, பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது

தமிழகத்தில் எம் பி பி எஸ், பி டி எஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைன் வாயிலாக துவங்கியது…

இதில் சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பண்ணோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நடைபெறுகிறது.

முதல் கட்டமாக விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோருக்கு நேரடி முறையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதற்காக காலை முதல் மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கின்றனர்.

கலந்தாய்வின்படி ஒதுக்கீடு செய்யப்படுவது பெரிய திரையில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் சார்பில் 2026 – 2027 ஆம் ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கு இன்று ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு.

7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டுக்கு 4,860 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவுக்கு 468 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 524 விண்ணப்பங்களும்,மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவுக்கு 212 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

சென்னை ஓமந்தூரார் அரசு பண்ணோக்கு மருத்துவமனை வளாகத்தில், காலை 8 மணிக்கு விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான தர வரிசை எண் 1-25 வரை இடம்பெற்றுள்ளவர்களுக்கு கலந்தாய்வும்,

காலை 8:30 மணிக்கு முன்னாள் ராணுவத்தினர் குடும்பங்களை சேர்ந்த வரிசை எண் 1 முதல் 30 வரையான மாணவர்களுக்கும்,

9 மணிக்கு தகுதி வாய்ந்த அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் காலை 10 மணிக்கு கலந்தாய்வு துவங்குகிறது.

காலை 10 மணிக்கு தரவரிசைப் பட்டியலில் பொதுப்பிரிவில் 1 முதல் 448 வரையில்
நீட் தேர்வு மதிப்பெண், 599 முதல், 469 வரை பெற்ற 448 மாணவர்களுக்கும், தரவரிசைப் பட்டியலில் 449 முதல் 912 வரையில் நீட் மதிப்பெண் 468 முதல் 433 வரையிலான 464 மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இட ஒதுக்கீட்டின் கீழ் எஸ்சி பிரிவில் தரவரிசைப் பட்டிலில் 129 முதல் 156 வரை பெற்றவர்களும், எஸ்சிஏ பிரிவில் தரவரிசைப் பட்டியலில் 21 முதல் 32 வரையில் இடம் பெற்ற மாணவர்களும், எஸ்டி பிரிவில் தரவரிசைப் பட்டியலில் 7 முதல் 12 வரையில் பெற்ற மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்விற்கான அழைப்புக்கடிதம் தனியாக அனுப்பப்பட மாட்டாது.

கலந்தாய்விற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வருகைத் தர வேண்டும்.

கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.

நீட் யுஜி 2026 அனுமதி அட்டை மற்றும் மதிப்பெண் அட்டை, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், 11 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
12 ம் வகுப்பு அல்லது சமமான மதிப்பெண் பட்டியல், தமிழ்நாடு அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்ததற்கான உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate), சம்பந்தப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து (CEO) பெறப்பட்டிருக்க வேண்டும்.

கடைசியாகப் படித்த பள்ளியிலிருந்து பெற்ற மாற்றுச் சான்றிதழ் (அல்லது) விண்ணப்பதாரர் தற்போது படித்துக்கொண்டிருக்கும் பள்ளியிலிருந்து பெற்ற உண்மைச் சான்றிதழ் (Bonafide certificate) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பிறப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பெற்றோரில் ஒருவரின் சாதிச் சான்றிதழ் (தந்தை அல்லது தாய்).
அழைப்பவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என கூற முடியாது .

மாணவர்கள் பெற்ற மதிப்பெண் தரவரிசை இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளின் அடிப்படையிலேயே ஒதுக்கீடு செய்ய முடியும்.

கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்குள் செல்போன் உள்ளிட்ட தொடர்பு சாதனங்கள் அனுமதிக்கப்படாது என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

மருத்துவ கல்வியை இயக்குனர் மருத்துவர் லோகநாயகி பேட்டி உள்ளது

மருத்துவ படிப்புக்கான தேர்வு செய்யப்பட்ட மாற்றத்திறனாளிகள் மாணவர்கள் பேட்டி உள்ளது

error: Content is protected !!