பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்த்தி வழங்க கோரி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாப்பிள்ளை கவுண்டன் புதூர் கொள்முதல் நிலையம் முன்பாக விவசாயிகள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.3 விலை உயர்வு தங்களின் உற்பத்தி செலவுக்கு எந்தவிதத்திலும் கட்டுபடியாகாது எனக்கூறி, பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இப்போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
