டில்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வேகமாக பன்றிக்காய்ச்சல் பரவுகிறது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவும் நிலையில் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஜனவரியில் 19 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 339 பேராக உயர்ந்துள்ளது. அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
