Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் காலி குடங்களுடன் பரபரப்பு!

திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் காலி குடங்களுடன் பரபரப்பு!

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளது.இதில் 55 ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த வெ. ராமதாஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலி குடங்களுடன் திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு இன்று காலை திரண்டு வந்தனர்.அப்போது அவர்கள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து குடிநீர் பிரச்சனை குறித்து முறையிட்டனர்.பின்னர் இதுகுறித்து கவுன்சிலர் ராமதாஸ் கூறியதாவது:-
திருச்சி மாநகராட்சி 55 வது வார்டில் சுமார் 4000 குடும்பங்கள் உள்ளன இங்கு குறிப்பாக பிராட்டியூர், செல்வ நகர் , ஜெயா நகர் , வசந்த நகர் , ஜெ ஆர் எஸ் நகர் , நட்சத்திர நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1800 குடும்பங்கள் வசித்து வருகின்றன இங்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே குடிநீர் வருகிறது கடந்த காலங்களில் குடிநீர் பிரச்சினையை பலமுறை எடுத்துக் கூறியும் முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இரண்டு வருடங்களாக ஒரே பதிலையே மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். 24 x 7 குடிநீர் வழங்கல் திட்டம் மூலமாக சரியாகிவிடும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள் ஜீயபுரம் பம்பிங் மூலமாக வழங்கப்படும் குடிநீர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும்தான் முறையாக வழங்கப்படுகிறது எனவே 55 -வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் சிரமத்தை உடனடியாக போக்கிட வேண்டும் இல்லை என்றால் வார்டு பொதுமக்கள் அனைவரையும் திரட்டி திருச்சி மாநகராட்சியை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்துவோம் இவ்வாறு அவர் கூறினார்

error: Content is protected !!