Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“Finishing சரி இல்லையே பா..” பத்திரிக்கையாளரை பதற வைத்த தானியங்கி கார்

“Finishing சரி இல்லையே பா..” பத்திரிக்கையாளரை பதற வைத்த தானியங்கி கார்

பாகிஸ்தானில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் கார் ஒன்று திடீரென தனது இணைப்பை இழந்து, நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனம் மீது மோதிய காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் தானியங்கி கார் சோதனையின்போது முதலில் நன்றாக சென்ற கார், திடீரென, ஸ்டீயரிங்-ல் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கார் சாலையில் இருந்து விலகி சென்றது. இதனால், காரில் இருந்த பத்திரிக்கையாளர், Handbrake-ஐ போட முயன்றும் காரை கட்டுப்படுத்த முடியாமல், போலீஸ் வாகனம் மீது இடித்து விபத்துக்குள்ளானது. பத்திரிகையாளர் முஹம்மது ஆலிஜா இஸ்லாமாபாத்தின் டி-சௌக்கில் அந்த வாகனத்தை பற்றி வீடியோவில் விளக்கி கொண்டிருந்தபோது, ​​கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்தது. அபோட்டாபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆர்வலர் எஹ்சான் ஜாஃபர் உருவாக்கிய, தொழில்நுட்பம் சார்ந்த தானியங்கி ஓட்டுநர் திட்டத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இந்த செயல்விளக்கம் நடத்தப்பட்டது.

“பாகிஸ்தானில் திறமைக்கு பஞ்சமே இல்லை” என்ற நகைச்சுவையான தலைப்புடன் இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

error: Content is protected !!