Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்ணாமலையின் அடுத்த நகர்வில் அப்சரா பங்கு என்ன?

மூத்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான அப்சரா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் அரசியல் தலைவருமான கே. அண்ணாமலையை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட அப்சரா, அதிமுகவில் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றியவர். கட்சிக்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் தீவிரமாகப் பங்கேற்ற அனுபவமும் அவருக்கு உள்ளது.

தற்போது அண்ணாமலையுடனான சந்திப்பில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு, கல்வி, சுற்றுச்சூழல், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அம்மாவால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அப்சரா, தனது அடுத்த அரசியல் அத்தியாயத்தை அண்ணாமலையுடன் தொடங்கப் போகிறாரா? அவரின் அடுத்த நகர்வு என்ன? என்பதே தற்போது எழுந்துள்ள எதிர்பார்ப்பு.

error: Content is protected !!