Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் 11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

சென்னையில் 11இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

சென்னையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி மூலம் முதல்கட்டமாக 11 இடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில், பங்களிப்பு நிறுவனங்களுடன் நேற்று ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டன.

புதிய பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பாக காத்திருக்க குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, மின்விளக்குகள், வெயில் தாங்கும் கூரை, பாதுகாப்பான கண்ணாடி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. பயணிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுகின்றன.மேலும், பேருந்து வழித்தடங்கள் குறித்த தகவல்கள், வைபை வசதி உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளப் பாதையும் அமைக்கப்படும். மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதியும் இந்த பேருந்து நிறுத்தங்களில் இடம்பெற உள்ளது.

டி.எம்.எஸ். அண்ணாசாலை, மயிலாப்பூர் பேருந்து நிறுத்தம், வடபழனி ஜவஹர்லால் நேரு சாலை, வேளச்சேரி விஜயநகர் பேருந்து முனையம், வடபழனியில் பேருந்து நிறுத்தம், கிண்டி சின்னமலை, ஆற்காடு சாலையில் உள்ள ஆவிச்சி பள்ளி, ஆலந்தூர் மெட்ரோ, எழும்பூர் வடக்கு, எழும்பூர் தெற்கு உள்ளிட்ட 11 இடங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், தேவையுள்ள இடங்களில் மேலும் பல பகுதிகளுக்கும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!