Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பெண்களிடம் சில்மிஷம்- போதை வாலிபர் கைது

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கி மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அங்குள்ள கூவம் ஆற்று தரைப்பாலத்தை கடந்துதான் செல்லவேண்டும். இந்த நிலையில், ரயிலில் இருந்து இறங்கி பெண் பயணிகள் நடந்து செல்லும்போது குடிபோதையில் வரும் இளைஞர்கள் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் நகர போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது குடிபோதையில் இருந்த இளைஞர் போலீஸ்காரர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கைது செய்தபோது வாலிபரின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் வந்து அவரை அழைத்துச்செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை தகாதவார்த்தைகளால் பேசியதுடன் அடிக்க முயன்றார். இதையடுத்து அந்த வாலிபரை மனைவி, சகோதரியிடம் ஒப்படைத்து போதை தெளிந்ததும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துவரவேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!