மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அம்மா அவர்களின் 86 ஆவது அவதார திருநாளை முன்னிட்டு மற்றும் மன்ற 17 ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி வழிபாட்டு மருத்துவர் தஞ்சை மாவட்ட தலைவர் பி எஸ் வாசன் கலந்து கொண்டு பள்ளி

சிறுவர்களுக்கு நோட்புக் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . விழாவில் மாவட்டத் தலைவர் பி எஸ் வாசன் பகுதி இணை செயலாளர் குருநாதசாமி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் வழிபாட்டு மன்ற தலைவர் ராமகிருஷ்ணன்

பிரில்லியண்ட் பள்ளி தாளாளர் சுப்ரமணியன் மன்ற பொருளாளர் அமராவதி பத்திர எழுத்தர் கணேசமூர்த்தி மற்றும் தலைவர் மற்றும் மன்ற சக்திகள் மேல்மருவத்தூர் வழிபாட்டு மன்றம்

அதிராம்பட்டினம் வழிபாட்டு மன்ற கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
