சென்னை கொளத்தூர் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்வதாக கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, திருமுல்லைவாயல் ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்த டேனியல் (21) என்பவரை கைது செய்து 300 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தியதில் கொரியர் மூலம் ஆன்லைனில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததுதெரியவந்தது. இதையடுத்து டேனியலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
